போபால் போலீசுக்கு வரும் விநோத புகார்கள்..

போபால் போலீசுக்கு வரும் விநோத புகார்கள்..

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு கிருஷ்ணகுமார் என்பவர் விநோத புகாருடன் வந்தார்.

‘’உள்ளூர் தையல்காரரிடம் உள்ளாடை ( அண்டர் வெர்) தைப்பதற்குக் கொடுத்தேன். அவர் மிகவும் சிறிதாகத் தைத்துக் கொடுத்துள்ளார். அந்த தையல்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகாரில் கூறி இருந்தார்.

’’ஊரடங்கு நேரத்தில், எங்களுக்கு வேறே வேலை இல்லையா?’ என எரிச்சல் அடைந்த போலீஸ்,  கிருஷ்ணகுமாரை நீதிமன்றத்துக்குப் போகச்சொல்லியுள்ளது.

இதே காவல் நிலையத்தில் , கொஞ்ச காலத்துக்கு முன்பு அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரி ஒரு புகார் அளித்தார்.

‘’டெய்லரிடம் சல்வார் கமீஸ் தைக்க கொடுத்தேன். அவர் இறுக்கமாகத் தைத்துக் கொடுத்து விட்டார். இது பற்றி அந்த டெய்லரிடம் கேட்டபோது’’ நீங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு அளவு கொடுத்தீர்கள்.ஆனால் இப்போது உடல் எடை கூடி உள்ளது’’ என வாக்குவாதம் செய்கிறார். அதாவது அந்த டெய்லர் ‘ என்னை குண்டுப்பெண்’ என விமர்சனம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த புகாரில் கூறியுள்ளார்.

புகார் அளித்தவர் அரசாங்க அதிகாரி என்பதால், இது பற்றி போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

– பா.பாரதி.