பிரபல தகவல் உரிமை சட்ட ஆர்வலர் ‘மனோஜ் திரிபாதி’ சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்

போபால்:

த்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல தகவல் உரிமை சட்ட ஆர்வலர் ‘மனோஜ் திரிபாதி’ சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மற்றும் அமைச்சர்கள், முக்கிய நபர்கள் மீதான பல ஊழல் வழக்குகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த வந்தவர் மனோஜ் திரிபாதி. இவர் சந்தேகத்திற் குரிய  சூழ்நிலைகளில் இறந்துள்ளார்.

மனோஜ் திரிபாதி

தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலரான  மனோஜ் திரிபாதி (வயது 37)  பலத்த காயத்துடன்  கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை மீட்டு, போபாலில் உள்ள பன்சால் மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்தனர்.  இந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக கூறப்படு கிறது.

மனோஜ் திரிபாதி, போபாலின் கோலார் பகுதியில் உள்ள துவாரகா என்ற அடுக்கு மாடி கட்டிடத்தில் குடியிருந்து வந்தார். பல மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தில் மொட்டை மாடியில்  இருந்து அவர் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்தி குடும்பத்தினர் கூறும்போது, அவர் போன் செய்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக அவர் விழுந்திருக்கலாம் என்று கூறி உள்ளனர்.

ஆனால், குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் மொட்டை மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து விசாணை நடத்தி வருவதாகவும் போபால் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

சமூக ஆர்வலர் ஒருவர் பலத்த காயங்களுடன் மாடியில் இருந்து விழுந்து இறந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.