‘பயங்கரவாதியே திரும்பி போ’: பாஜக எம்.பி. பிரக்யாவுக்கு எதிராக போபால் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷம்

போபால்:

போபால் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான பிரக்யா சிங் தாகூர், போபாலில் உள்ள பல்கலைக்கழகம் செல்ல முயன்ற போது, மாணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பயங்கரவாதியே திரும்பி போ என்று  மாணவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாரதியஜனதா கட்சியை சேர்ந்த இளம் சாமிரியாரினா பிரக்யாசிங் தாக்கூர். இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில்கூட விமானத்தில் பயணம் செய்யும்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சைகளை உருவாக்கினார்.

இந்த நிலையில், நேற்று பல்கலைக்கழகத்தி படித்து வரும், பத்திரிக்கை மற்றும் தொலைத்தொடர்பு துறை பிரிவைச்  சேர்ந்த 2 மாணவிகள், போதிய வருகைப்பதிவு இல்லாததால்  பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் இருவரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், அந்த  மாணவிகளை சந்திக்க பிரக்யா சிங் தாகூர் பல்கலைக்கழகம் சென்றார். ஆனால், சில மாணவர்கள் அங்கு திரண்டு வந்து, பிரக்யா சிங் தாகூரை பார்த்து “பயங்கரவாதியே திரும்பி போ” என முழக்கமிட்டனர். இதற்கு, பிரக்யா சிங் தாகூருடன் வந்த பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பதில் கோஷம் எழுப்பினர்.

இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களை அங்கிருந்து அகற்றி நிலமையை சீர்படுத்தினார்.

இச்சம்பவம் குறித்து கூறிய பிரக்யா சிங் தாகூர், “இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன்” என்று மிரட்டி உள்ளார்.