உதயநிதி படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாகும் பூமிகா…..!

‘பத்ரி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. தமிழ் மற்றும் அல்லாமல் தெலுங்கிலும் நடித்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு, தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமந்தாவின் ‘யூ டர்ன்’ படத்தில் நடித்திருந்த பூமிகா தமிழுக்கும் ரீ எண்ட்ரியாகிறார்.

இந்நிலையில் இயக்குநர் மு.மாறனின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூமிகா. படபிடிப்பில் தன்னுடைய போர்ஷனுக்கான ஷூட்டிங்கை 10 நாட்களில் முடித்து கொடுத்துள்ளார்.

நயன்தாரா நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்திலும் பூமிகா நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கார்ட்டூன் கேலரி