பூடான் நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலி பதிவு: சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திம்பு: பூடானில் கொரோனா தொற்றால் முதன் முதலாக உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 34 வயதான நபர் நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையில் இருந்த அவர் தலைநகர் திம்புவில் உள்ள மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் இருந்து பூடான் வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு முதலில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது வரை மொத்தம் 767 கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 300,000க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்தும் முகமாக, நாட்டின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, 2 முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் தற்போது பூடானில் நாள் ஒன்றுக்கு 13 பேர் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.