டெல்லி: அண்டை நாடான பூடான் இந்தியாவில் இருந்து 1,50,000 கொரோனா தடுப்பூசிகளை பெறுகிறது.

 

சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியா அனுமதித்துள்ளது. 4 நாட்களாக நாடு முழுவதும் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டும் 4 நாட்களில் இதுவரை நான்கரை லட்சம் பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அண்டை மற்றும் முக்கிய நட்பு  நாடுகளிடமிருந்து இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் வெகுவாக வலுத்து வந்தன.

இதையடுத்து, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது. அதன் முதல் கட்டமாக நாளை பூடான் நாட்டுக்கு 1, 50,000 தடுப்பூசிகளை இந்தியா அளிக்கிறது.

இதேபோல வங்கதேசத்துக்கு 1,00,000 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இநதியா அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தடுப்பூசிகளை வழங்குவதற்காக தேவையான ஒழுங்குமுறை அனுமதிகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.