காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து புவனேஷ்வர் குமார் விலகல்

 

துபாய் :

க்கிய அரபு நாடுகளில் நடந்து வரும் ஐபிஎல் 2020 சீசனில் இருந்து சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் வெளியேறினார்.

காயம் காரணமாக 6 முதல் 8 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், அடுத்து வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சார்பாக விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பந்துவீசும் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய புவனேஷ்வர் குமாருக்கு தொடை பகுதியில் தசை பிடிப்பு காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.