இன்னும் 2-3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் கலந்துக் கொள்ள மாட்டார் : கோலி

ண்டன்

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக புவனேஸ்வர் இன்னும் இரண்டு அல்லது மூன்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ளமாட்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிரிட்டனில் நடந்து வருகிறது.   இந்த  போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.    இந்திய அணி சிறப்பாக விளையாடி வென்றது.

இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமாருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவர் குறைந்துள்ளார்.   தமது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கான சிகிச்சைகளை புவனேஸ்வர் குமார் எடுத்துக் கொண்டு வருகிறார்.

ஆயினும் அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதை ஒட்டி அணித்தலைவர் விராட் கோலி, “புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையில் உள்ளார்.  இன்னும் 2 அல்லது 3 போட்டிகளில் அவர் கலந்துக் கொள்ள மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

இதனால் இதுவரை இந்த போட்டிகளில் கலந்துக் கொளாத முகமது ஷமிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.