அடுத்த 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்து. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.

buvanesh

தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கடைசி வரை மிரட்டியது. கடைசி நேரத்தில் போட்டி டிராவில் முடிந்தது.

இரண்டாவது ஒருநாள் போட்டி டிராவில் முடிவுக்கு வந்ததால் இரு அணி வீரர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். சொந்த மண்ணில் இத்தனை ரன்கள் அடித்தும் வெற்றி பெற முடியவில்லை என இந்தியாவும், சிறப்பாக சேஸ் செய்ய வீரர்கள் பேட்டிங் செய்தும் வெற்றி பெற முடியவில்லை என விண்டீஸ் அணியினரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சொந்த மண்ணில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, மிகுந்த நம்பிக்கை வாய்ந்த பவுலர்களான பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரை அணிக்கு அழைத்துள்ளது.

அடுத்த 3 போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், அம்பதி ராயுடு, தோனி (WK), ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், கலீல் அகமது, ஜாஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார்

கடந்த இரண்டு போட்டிகளில் 14 பேர் அடங்கிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது ஷமி மட்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டு ஜாஸ்பிரிட் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டு, 15 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 ஒருநாள் போட்டிகளும் புனே, முன்பை, திருவனந்தபுரத்தில் அக்டோபர் 27,29 மற்றும் நவம்பர் 1 ம் தேதி நடைபெற உள்ளது.