ணிலா

பிலிப்பன்ஸில் மோடியும் ட்ரம்ப்பும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர்.

பிலிப்பைன்சின் தலைநகரான மணிலா நகரில் ஆசியன் உச்ச மகாநாடு நடைபெறுகிறது.   இதில் அமெரிக்கா ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் பங்கு பெருகின்றன.   மாநாட்டில் ஒரு பகுதியா மோடி மற்றும் ட்ரம்ப் இருவரும் இணைந்து இருதரப்பு பேச்சு வார்த்தையை நிகழ்த்தினர்.    இதில் இருநாடுகளின் ராணுவம், பாதுகாப்பு, ஆகியவற்றுடன்,  இருநாட்டு வர்த்தக ஊக்குவிப்பு,  தேசிய உறவுகள் ஆகியவை பற்றியும் அல்லொசனை நடத்தி உள்ளனர்.

முன்னதாக வியட்நாமில் ட்ரம்ப் உரையாற்றும் போது இந்தியாவை வெகுவாக புகழ்ந்துள்ளார். நூறு கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும்,  மிகவும் நல்லிணக்கம் கொண்ட ஒரு ஜனநாயக நாடு எனவும் புகழ்ந்துள்ளார்.