வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னணியில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வருகிறது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரும், அதிபருமான டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அலாஸ்கா, நெவாடா, வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். அதை தொடர்ந்து  பென்சில்வேனியாவிலும் அவர் முன்னணியில் உள்ளார்.

பென்சில்வேனியாவில் ஜோ பிடன், டிரம்பை விட 6000 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை. ஜோ பிடன் அந்த வாக்குகளை பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது.