அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றது முதல் முந்தைய அதிபர் டிரம்ப் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாற்றி அமைத்திருக்கிறார்.

அரசு உத்தரவுகள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் வெள்ளை மாளிகையில் மாற்றங்கள் என தொடர் மாற்றங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் தனது அலுவலகத்திலும் சில மாற்றங்களை செய்துள்ளார், அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அதிபரின் மேஜை மீது இருந்த பட்டன்.

டிரம்ப் அதிபராக இருந்தபோது அந்த மேஜை மீது வைக்கப்பட்ட சிகப்பு நிற அழைப்பு மணியை ஜோ பைடன் தூக்கியெறிந்திருக்கிறார்.

இந்த தகவலை தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்ட செய்தியாளர் ஒருவர்.

டிரம்ப் அதிபராக இருந்த போது அவரை பேட்டியெடு்க்க சென்ற நான் அவரது மேஜை மீதிருந்த சிகப்பு பட்டனை பார்த்தேன், அது என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது டிரம்ப் அதை அழுத்த அடுத்த சில நொடிகளில் அவரது மேஜைக்கு டயட் கோக் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

தற்போது அதிபர் ஜோ பைடன் தனது அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்து போடும் படம் வெளியானது அதில் அந்த டயட் கோக் பட்டனை காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

டயட் கோக் பட்டன் குறித்த இந்த டிவீட் தற்போது வைரலாகியுள்ளது.