காட்மண்டு, நேபாளம்

நேபாள நாட்டின் முதல் பெண் அதிபரான பித்யாதேவி மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

நேபாள நாட்டின் முதல் பெண் அதிபர் பித்யாதேவி,  இவர்    அவரது பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி நேபாளத்தில் தேர்தல் நடை பெற்றது.   அந்த தேர்தலில்  கம்யூனிஸ்ட் ஆதரவுடன் பித்யாதேவி மீண்டும் களம் இறங்கினார்.

அவருக்கு எதிராக நேபாளி காங்கிரஸ் தலைவர் குமார் லட்சுமி ராய் போட்டியிட்டார்.   அவரை தேர்தலில் தோற்கடித்து மீண்டும் பித்யாதேவி அதிபர் ஆனார்.   இந்த தேர்தலில் பித்யாதேவி மூன்றில் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளார்.   56 வயதான பித்யாதேவி மீண்டும் அதிபராக உள்ளார்.

பித்யாதேவி தனது பதின்ம வயதில் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பில் அரசருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்.   அதன் பிறகு அதே இயக்கத்தை சேர்ந்த மதன் பண்டாரி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.    கடந்த 1993 ஆம் வருடம் ஒரு மர்மமான கார் விபத்தில் மதன் பண்டாரி மரணம் அடைந்தார்.  அதன் பிறகு அவர் அரசியல் பணியில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தற்போது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பித்யாதேவிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.