டந்த ஆண்டு விஜய் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின்  இரண்டாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதற்காக பிரமாண்ட பேலஸ் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளும் கூடிய வீடு, பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபியில் அமைக்கப்பட்டு இறுதிக்கட்டப் பணியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் வெளியாக உள்ள பிக்பாஸ்-2 சீசனை கடந்த சீசனைப்போலவே  கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பது உறுதியான நிலையில், பிக்பாஸ்-2-ல் கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ்-2ல் கலந்துகொள்ளும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள்  குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சீசனில் பிரபல நகைச்சுவை நடிகர்கள் சிலர் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

கண்ணா லட்டு திங்க ஆசையா படப்புகழ் மற்றும் பல்வேறு தமிழ்ப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கி வந்த பவர் ஸ்டார் பங்கு பெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யூகிசேது, படவா கோபி போன்ற நடிகர்களும் பங்கு பெற வாய்ப்பிருப்பதாக சேனல் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது.

மேலும் தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகர்களான சாந்தனு, பரத், ஷாம்,  ஜித்தன் ரமேஷ் போன்றவர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முட்டி மோதி வருவதாகவும் உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.

அதுபோல பிரபல நடிகைகளான தற்போது படங்கள் இல்லாமல் செய்வதறியாது இருக்கும்  இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், ப்ரியா ஆனந்த், ரக்ஷிதா உள்பட பலர் தாங்களும் பங்குபெற விருப்பம் இருப்பதாக சேனல் வட்டாரத்தை முற்றுகையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ்-2 சீசனில் பங்குபெற இருப்போர் பட்டியல் முழுமையாக தயாராகி விட்டதாகவும், அதுகுறித்த விவரம் சீசன்-2 தொடங்கும்போதுதான் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நல்ல விளம்பரமும், ரசிகர்களும் கிடைப்பதால் அதில் கலந்து கொள்ள நடிகர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ள   பிக்பாஸ்-2 நிகழ்ச்சி ஜுன் 25 அன்று தொடங்குவதாக தெரிகிறது. அன்று முதல்  செப்டம்பர் 30 வரை 100 நாட்கள்  ஒளிபரப்பாக விருக்கிறது.

மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்த விவரம் விரைவில்….