பிக் பாஸ் ஹரிஷ் – ரைஸா இணைந்து நடிக்கும் திரைப்படம்

 

விஜய் டிவியில் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு மிகவும் புகழ் அடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ்.   இதில் பங்கு பெற்றவர்களுக்கு திரைத்துறையிலும் தொலைக்காட்சிகளிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.    இதில் பங்கு பெற்றவர்களில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸாவும் அடங்குவார்கள்.

ஹரீஷ் – அமலா பால்

அமலா பால் நடித்த சிந்து சமவெளி என்னும் படத்தில் அவருக்கு கணவனாக அறிமுகம் ஆனவர் ஹரிஷ் கல்யாண்.    அதற்குப் பிறகும் பல படங்களில் நடித்துள்ளார்.  ரைஸாவும் பல படங்களில் நடித்துள்ளவர்.   சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 என்னும் படத்தில் கஜோலுக்கு உதவியாளராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

கஜோல் – ரைஸா

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக ஹரிஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.   ஏற்கனவே கிரகணம் என்னும் படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்கிறார்.  ஹரிஷ் தனது பதிவில், “யுவனின் இசையுடன் வளர்ந்த நான் அவருடைய இசையமைப்பில் நடிக்கக் கண்ட கனவு நிஜமாகி இருக்கிறது.   ரைஸாவுடன் இணைவதில் மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பெயர் அறிவிப்பு ஆகியவை வரும் நவம்பர் 5 ஆம் தேதி அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.