சென்னை

பிக்பாஸ் புகழ் ஜூலி தற்போது அம்மன் தாய் என்னும் பக்திப் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களில் ஜூலியும் ஒருவர் ஆவார்.   இந்நிகழ்வில் கலந்துக் கொண்டதால் புகழ் அடைந்த இவர் தற்போது சின்னத்திரை தொகுப்பாளினி ஆகவும் திரை நட்சத்திரமாகவும் உள்ளார்.

நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த மாணவி அனிதாவின் வேடத்தில் நடிக்கும் ஜூலி அது தவிர ஒரு பக்திப்படத்திலும் நடிக்கிறார்.   அம்மன் தாய் எனப் பெயரிடப்பட்ட இந்த படத்தில் அம்மனாக ஜூலி நடிக்கிறார்.  புதுமுக வில்லைன் மற்றும் புதுமுக கதாநாயகன் இந்தப் படத்தில் அறிமுகம் ஆகின்றனர்.

தன்னைக் கட்டுப்படுத்தும் வில்லைனை அம்மன் ஜூலி வெல்வதே இப்படத்தின் கதையாகும்.    இதை ஒட்டி கிறுத்துவ மதத்தை சேர்ந்த ஜூலி முழுக்க முழுக்க ஒரு இந்துப் பெண் போலவே விரதம் இருந்துளார்.  அத்துடன்  அம்மன் வேடத்தில் நடிக்கும் போது மிகவும் சுத்தபத்தமாக இருந்துள்ளார் என தயாரிப்பாளர் சந்திரகாசன் கூறி உள்ளார்.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் இந்தப் படம் வெளிவரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.