தங்களுடைய தயாரிப்பில் 10-வது படத்தை அறிவித்துள்ளது ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம். இந்தப் படத்தை ஜே.எம்.ராஜ சரவணன் இயக்கவுள்ளார்.

இதில் ‘பிக் பாஸ்’ லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக கே.பூர்ணேஷ் அறிமுகமாகிறார்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்தப் படம் கதைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிறது.