இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ –

இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன்-4 வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்நிகழ்ச்சியை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வலம்வரத் தொடங்கி விட்டன. அதில், நடிகை சுனைனா, அதுல்யா, நடிகை கிரண், குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இன்னும் உறுதி செய்யவில்லை.