பிக் பாஸ் சீசன் 4 தொகுத்து வழங்குகிறாரா கமல்….!

தென்னிந்தியா முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றாலும், தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸின் நான்காவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை, தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபு தொகுத்து வழங்க இருக்கிறார்.

அதேபோல், தமிழ் பிக் பாஸ் சீசன் 4 செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் கமல் தான் தொகுத்து வழங்குகிறாரா என்பது இன்னும் தகவல் ஏதும் வெளியாகவில்லை .