அகமதாபாத்: தான் உரிமம் வாங்கியுள்ள உருளைக்கிழங்கு வகையை அனுமதியின்றி பயிரிட்டதற்காக, சம்பந்தப்பட்ட 4 குஜராத் விவசாயிகளிடம் தலா ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான பெப்ஸிகோ.

நிறுவனம் வாங்கி வைத்துள்ள உரி‍மையை துஷ்பிரயோகம் செய்ததற்காக, இந்த நஷ்டஈடு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு அகமதாபாத் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பெப்ஸிகோ தொடர்ந்துள்ள வழக்கானது, இதர பயிர் வகைகளின் மீதும் வழக்குத் தொடர்வற்கு ஒரு முன்னுதாரணம் ஆகிவிடும் என்று விவசாயிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட விதை வகைகளை விற்பனை செய்யாதவரை, விவசாயிகள் எந்த ரகப் பயிரையும் விவசாயம் செய்து, விற்பனை செய்வதோடு, விதைகளையும் விற்பதற்கும் சட்டம் அனுமதிப்பதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால், எதையும் விரிவாக சொல்வதற்கில்லை என்று பெப்ஸிகோ தரப்பில தெரிவிக்கப்படுகிறது.