நேற்றைய நாளில் பிக் பாஸ் வீடு கோழி பண்ணையாக மாற்றப்பட்டு புது டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்களின் புகைப்படத்துடன் தங்க முட்டை அனுப்பப்படும். அந்த நபர் கோழியாக மாறி அந்த முட்டையை கூட்டில் வைத்து பாதுகாக்க வேண்டும். மற்ற போட்டியாளர்கள் நரிகளாக அந்த முட்டையை பெயிண்ட் தொட்ட கை உடன் தொட வேண்டும். அப்படி தொட்டுவிட்டால் கோழி அவுட். அவரிடம் இருக்கும் பணம் தொடும் நரிக்கு வந்துவிடும்.

இந்நிலையில் 73-ம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஷிவானியின் முட்டையை பாலாஜி வைத்திருக்கிறார். ஒரு பக்கம் பாலாஜி சிறப்பாக விளையாடி வசூல் செய்ய, அனிதா மற்றும் ஆரி அதிரடி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அடிக்கடி ரூல் மாத்துரிங்க என கேபி ரம்யாவிடம் புலம்பி தீர்க்கிறார். சிறப்பான தரமான சம்பவங்கள் இருக்கு என அர்ச்சனா கூற ப்ரோமோ முடிகிறது.

இரண்டாம் ப்ரோமோவில், அர்ச்சனாவின் முட்டையை உடைக்க முயல்கிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். நவுரு நவுரு என சோம் சேகர் அர்ச்சனா வைத்திருக்கும் முட்டையை குறி வைக்கிறார். தொட்டுட்டேன் என்று சோம் சேகர் கூற, தொடவில்லை உடைத்திருக்கிறீர்கள் என ஹவுஸ்மேட்ஸ் சொல்கின்றனர்.