யோத்தி

யோத்தி நகரில் கட்டப்படவுள்ள மசூதியினுள் ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக மருத்துவமனை வரைபடத்தில் தெரிய வந்துள்ளது.

கடந்த 199*2 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.  அந்த இடத்தில் மீண்டும் மசூதியை அமைக்க வேண்டும் என இஸ்லாமியரும், ராமர் கோவில் அமைக்கவேண்டும் என இந்துக்களும் வழக்கு தொடர்ந்தனர்.  உச்சநீதிமன்றம் அளித்த் தீர்ப்பின்படி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளவும் மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பின்படி அயோத்தியின் புறநகர்ப் பகுதியான தன்னிபூர் என்னும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.   இந்த மசூதியை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள இந்தோ இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை இந்த மசூதியின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.  இந்த மசூதியின் வரைபட,ம் அனுமதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.    அந்த அனுமதி விரைவில் கிடைத்தால் வரும் குடியரசு தினத்தன்றோ அல்லது தாமதமானால் சுதந்திர தினத்தன்றோ அடிக்கல் நாட்டப்படும் என அறக்கட்டளை அறிவித்துள்ளது.

ஏற்கனவே அந்த இடத்தில் மசூதியுடன் இந்தோ இஸ்லாமிய கலாச்சார ஆய்வு மையம், அறக்கட்டளையின் மருத்துவமனை, அன்னதான மண்டபம், அருங்காட்சியகம்  பொது நூலகம் உள்ளிட்டவை அமைக்கப்பாடும் என அறக்கட்டளை அறிவித்திருந்தது.  நேற்று இந்த கட்டிடத்துக்கான  வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி இங்கு மசூதியைப் போல் 6 மடங்கு பரப்புள்ள மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

இந்த வரைபடத்தில் காணப்படும் மசூதியில் வழக்கமான கோபுரங்கள், வளைவுகள், போன்றவை இடம் பெறவில்லை.  இந்த மசூதியின் வளாகத்தில் மசூதி, மருத்துவமனை தவிரச் சமுதாய சமையல் அறை, அருங்காட்சியகம் உள்ளிட்ட பல வசதிகள் அமைக்கப்பட உள்ளன.   இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 2000 பேர் தொழுகை நடத்த முடியும்.ல்  இது இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போல் 4  மடங்கு பெரியதாகும்.

மசூதி குறித்து அறக்கட்டளை செயலாளர் அதர்ஹுசைன், “இந்த புதிய மசூதி கோள வடிவத்தில் இரு தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.  இந்த மசூதியின் மூலம் கால நிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  இந்த மசூதியானது மத அடையாள ரீதியாக இல்லாமல் ஆற்றல் மிகுந்த ஒரு கட்டுமானமாக விளங்கும்.

இந்த மசூதியில் மின்சார இணைப்பு இருக்காது.  மாறாக மசூதியின் அனைத்து மின் தேவைகளும் சூரிய ஒளி மின் பலகையின் மூலம் உண்டாக்கப்படும்.   இங்கு அமைக்கப்படும் மருத்துவமனை 4 மாடிகளில் 200 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக அமைக்கப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.,