ண்டன்

பிரபல தொழிலதிபர் பி ஆர் ஷெட்டியின் அபுதாபி நிறுவனமான என் எம் சி ஹெல்த் நிறுவனம் பிரிட்டன் நீதிமன்ற மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஐந்து பெரிய இந்தியச் செல்வந்தர்களில் பி ஆர் ஷெட்டியும் ஒருவர் ஆவார்.  மருத்துவரான இவர் அடிமட்டத்தில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆவார்.  தற்போது இவருக்கு அபுதாபியில் நியு மெடிகல் செண்டர் (என் எம் சி) என்னும் மிகப்பெரிய தொடர் மருத்துவமனைக் குழு உள்ளது.   அத்துடன் பணப் பரிமாற்ற தொழிலையும் இவர் நடத்தி வருகிறார்.

கடந்த 1970களின் மத்தியில் தொடங்கப்பட்ட என் எம் சி மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் 19 நாடுகளில் 194 மருத்துவமனைகளை நடந்து வருகிறது.   என் எம் சி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன.  அவ்வகையில் இந்த நிறுவனம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இடம் பெற்றுள்ளது.  லண்டன் பங்குச் சந்தை விதிகளை மீறியதால் இந்த நிறுவனத்தை தற்போது பிரிட்டன் நீதிமன்றம் தனது மேற்பார்வையில் கொண்டு வந்துள்ளது.

அதையொட்டி இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கலைக்கப்பட்டு நிர்வாகம் குறித்த முடிவுகள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதே வேளையில் என் எம் சி குழுமம் நடத்தும் அனைத்து மருத்துவமனைகள்,  சுகாதார மையங்கள், உள்ளிட்டவை தொடர்ந்து இயங்க உள்ளன. எனவே இந்த நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளைக் கவனிக்க நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் அபுதாபி கமர்சியல் வங்கியில் 6600 கோடி டாலர்கள் கடன் வாங்கி திருப்பி அளிக்காமல் உள்ளது.  எனவே இந்த வங்கி தங்களையும் நிறுவன நிர்வாகக் குழுவில் இணைக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.   என் எம் சி நிறுவனத்துக்கு மேலும் சில அரபு வங்கிகள் கடன் அளித்துள்ளன.  அவற்றில் அபுதாபி கமர்சியல் வங்கி அதிக அளவில் கடன் கொடுத்துள்ளது.