குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியதில் மிகப்பெரிய பொருளாதார தவறு…வல்லுனர்கள் கருத்து

மும்பை:

காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய பொருளாதார தவறாகும். இது விவசாயிகளின் 50 சதவீத சாகுபடி செலவுத் தொகை, குத்துமதிப்பான கூலி ஆகியவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தேவை, விநியோகம், சர்வதேச போட்டி ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக பொருளாதார ரீதியிலான மாற்றம் ஏதும் ஏற்படாது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க மோடி முயற்சி செய்துள்ளார். இதன் மூலம் விவசாய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்று திட்டமிட்டுள்ளார். ஆனால், இது மோசமான உற்பத்தி பெருக்கத்தை தான் அதிகரிக்கும். உணவு பொருட்களின் விலை உயர்வு மோசமான பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தும்.

இது தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும். மோடியின் இந்த அறிவிப்பு எதிர்வரும் தேர்தலுக்கு வேண்டுமானால் அவருக்கு பயன்படலாம். ஆனால், இந்தியாவின் நீண்ட கால உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் செழிப்பை பாதிக்கும். விவசாயிகளை சர்வதேச அளவில் போட்டியிடக் கூடிய உற்பத்தியாளர்களாக கருதப்பட வேண்டும். அவர்களை கருணை பொருளாக பார்க்க கூடாது. அவர்களை ஊக்குவித்தும், உதவி செய்தும் போட்டியை எதிர்கொள்ளும் வகையிலான பொருளை உற்பத்தி செய்ய வேண்டும். போட்டியில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அனைத்து பயிர்களில் இருந்தும் குறிப்பிட்ட வருமானம் வரும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டால் இந்தியா மட்டுமல்ல, இந்த உலகிற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்துவிடலாம். 50 சதவீத விலை உயர்வு என்பது முழுக்க முழுக்க தன்னிச்சையான முடிவாகும். விவசாயிகள் துயரத்தில் இருப்பது உண்மை தான். ஒரு நிமிடத்திற்கு 44 இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு மேல் உயர்வதாகவும், அதிகப்படியான வறுமை விரைவில் வீழும் என்று அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

விவசாய பிரச்னை என்பது வறுமையோ? அல்லது பற்றாகுறையோ? கிடையாது. ஆனால், பல பயிர்களை அதிகப்படியாக உற்பத்தி செய்வது தான் பிரச்னை. இது தான் பயிர்களின் விலையை பாதிக்கிறது. அதனால் அதிப்படியான உற்பத்தியை ஊக்குவிக்க கூடாது. மேலும், அதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வில் இடமளிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: big jump in minimum support prices for kharif crops announced by the Modi government is its biggest economic blunder says experts, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியதில் மிகப்பெரிய பொருளாதார தவறு...வல்லுனர்கள் கருத்து
-=-