இடம் மாறி மலரும் காதல்: பிக்பாஸ் வீட்டில் புது டுவிஸ்ட்

ஏற்கனவே அபிராமி – முகன் ராவ் விவகாரம் பிரச்சனையா போய்கிட்டு இருக்க, 10ம் நாள் தொடர்ச்சியை 11வது நாள்ல காட்டினாங்க பிக்பாஸ். தண்ணீரை சேமிக்குறதுக்காக முதல்ல டைமிங் முடிவு பண்ணனும்னு வனிதா ஆரம்பிக்க, எல்லாரும் அதை கிண்டலும், கேலியும் செய்ய ஆரம்பிச்சது, மோகன் வைத்யாவையே சிரிக்க வெச்சுடுச்சுன்னு தான் சொல்லனும். கடைசியா சேரன் தண்ணீரை சேமிக்குறதுக்கு சொன்ன ஐடியா தான் எல்லாராலும் ஏற்கப்பட்டுச்சுன்னு சொல்லனும். இதுல சேரனுக்கும் – பாத்திமா பாபுவுக்கும் இடையே இதுல கருத்து வேறுபாடு ஏற்பட, வனிதாவோட டைமிங் ஐடியா தேவையே இல்லைன்னு சொல்லி அவங்க சொன்னதும் ஏற்கும் விதமா தான் இருந்துச்சுன்னு சொல்லனும். அவ்வளவு தான். உடனே வனிதா பிரச்சனையா அதை உருவாக்க, யாரும் பெரிசா அதை கண்டுக்கலன்னு தான் சொல்லனும்.

11வது நாளோட துவக்கத்துல ரஜினி நடிச்ச பேட்ட படத்துல இருந்து மரணம் மாசு மரணம் பாட்டு போடப்பட்ட, லாஸ்லியா வீட்டுக்குள்ளயே ஆடினாங்கன்னு சொல்லலாம். அதேநேரம், மற்ற சிலர் வீட்டுக்கு வெளியே ஆடிட்டு இருந்தாங்க. அப்ப மறுபடியும் ஒரு லெட்டர் அனுப்பின பிக்பாஸ், செய்தி வாசிப்பது எப்படின்னு சொல்லி போட்டியாளர்களுக்கு சொல்லி கொடுக்க சொன்னார். முதல்ல அந்த ரிஸ்க்கை எடுத்ததே சாண்டி மாஸ்டர் தான்னு சொல்லனும். அவர் செய்தி வாசிக்குறேன்னு சொல்லி, படிச்சதும், சரவணன் பத்துகத்துல இருந்து பார்த்து படிக்குற மாதிரி படிச்சதும் மத்த போட்டியாளர்களை சிரிக்கவே வெச்சுடுச்சுன்னு சொல்லலாம். ஷெரினுக்கோ தமிழ் வரலன்னு சொன்னாலும், ரொம்பவே முயற்சி செஞ்சாங்கன்னு தான் சொல்லனும். அதுக்கப்புறம் பேசின மீரா மிதுன், ரொம்பவே அருமையா செய்தி வாசிச்சாங்கன்னு தான் சொல்லனும். அந்த அளவுக்கு உச்சரிப்பு பிழை இல்லாம அவங்க பேசினதை பாத்திமா பாபுவே பாராட்டினாங்க.

இது ஒரு பக்கம் இருக்க முகன் – கவின் இடையே நடக்குற சாக்ஷி உடனான காதல் – நட்பு போர் பத்தி, ஷெரினுக்கு சொன்னாங்க சாக்ஷி. உடை மாற்றிட்டு வாங்கன்னு சாக்ஷி கிட்ட முகன் சொன்னதாகவும், சாக்ஷி அப்படியே மாற்றிட்டு வந்தப்போ, கவினோட முகம் மாறினதாகவும் சொல்லி ஷெரின் கிட்ட சாக்ஷி சொன்னாங்க. இதுல வனிதாவை திடீர்னு கூப்பிட்ட பிக்பாஸ், போலீஸ் வீட்டுக்கு வந்திருக்குறதை சொல்ல, வனிதா நடந்ததை வந்து ரேஷ்மா கிட்ட சொன்னாங்கன்னு சொல்லலாம். அதேநேரம், வெசல் வாஷிங் டீம் கேப்டன் நீங்க ஏன் வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லி கேட்டப்ப, கேப்டன் வேலை பார்க்கவே கூடாதுன்னு சொல்லி ஏன் என்ன காரணம்னு கேட்டாங்க வனிதா. அப்போ சேரனும், பாத்திமா பாபுவும் வனிதா வேலை செய்யுறதே இல்லைன்னு சொன்னதாகவும், அதனால தான் இப்படி கேட்டதாகவும் சொல்ல, மறுபடியும் ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்டாங்க வனிதா.

இப்படி போய்கிட்டு இருந்த பிக்பாஸ் வீட்ல, அன்னப்பறவை அணிக்கு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். அதை சாண்டியும், மதுமிதாவும் செய்ய, பாத்திமா பாபு டாஸ்க் பத்தி படிச்சாங்க. சேற்றுல இருக்குற எல்லோ மற்றும் ஸ்டார் காயின்களை எடுக்கனும்னு உத்தரவிட்டிருந்தாரு. அதன்படி மதுமிதாவும், சாண்டியும் சேற்றுல இறங்கி, காயின்களை எடுக்க, மொத்தமா ஆயிரம் மதிப்பெண்ணுக்கு 590 மதிப்பெண் எடுத்திருந்தாங்கன்னு தான் சொல்லனும். இது ஒருபக்கம் இருக்க அபிராமி, சாக்ஷி, ஷெரின், ரேஷ்மான்னு பிரச்சனைகளை வளர்க்குற இந்த டீம், புதுசா லாஸ்லியாவை கார்ணர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு தான் சொல்லனும். லாஸ்லியா அவங்களுக்கு எதிரா நடக்குறதா நினைக்குற இந்த 4 பேரும் கவின் கிட்ட அதுபத்தி சொல்ல, கவின் லாஸ்லியா கிட்ட கேட்டாருன்னு சொல்லலாம். ஆனா லாஸ்லியா மறுக்கவே, கவின் முன்னாடி பொய்ன்னு சொன்ன சாக்ஷி, லாஸ்லியா போனதுக்கு அப்புறம் லாஸ்லியாவுக்கு தங்களை பிடிக்கலைன்னு பிரச்சனையை புதுசா மாற்றினாங்கன்னு தான் சொல்லனும். இது பலரையும் குழப்பும் விதமான காட்சியா இருந்தாலும், மதுமிதா, மீரா, சேரன், பாத்திமா பாபுன்னு நாலு பேரோடவும், லாஸ்லியா நெருக்கம் காட்டுறதால, லாஸ்லியாவை இவங்க கார்னர் பண்ணுறாங்க அப்புடிங்குறது அதுக்கப்புறம் தான் தெரிய வந்துச்சுன்னு சொல்லனும்.

பிக்பாஸ் வீட்ல புது சண்டை முளைச்சுடுமோ அப்டின்னு யோசிக்குறதுக்குள்ள, ஆண் போட்டியாளர்களுக்கு அவ்வை சண்முகி டாஸ்க் குடுத்தார் பிக்பாஸ். பாத்திமா பாபுவா சரவணன் நடிக்க, மீராவா சாண்டி மாஸ்டர் நடிச்சார். வனிதாவா தர்ஷன், ஷெரினா கவின், மதுமிதாவா மோகன் வைத்யான்னு எல்லாரும் ஒரு ரோல் எடுக்க, மொத்த வீடுமே சிரிப்பு களமா மாறிடுச்சுன்னு தான் சொல்லனும். மீராவா நடிச்ச சாண்டி மாஸ்டர், தன்னோட கலாய்க்கும் நடனம், நடிப்பு என மொத்தமா வெச்சு செய்ய, எல்லாருமே விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா பார்த்துக்கோங்களேன். இதுல ஷெரினோட ட்ரெஸ் போடுறேன்னு சொல்லி, கவின் போட்ட ட்ரெஸ், மொத்தமா எல்லாரையுமே சிரிக்க வெச்சுடுச்சுங்க. இந்த டாஸ்க் முடிஞ்சதும், பாத்திமா பாபு மோகன் வைத்யா மாதிரி யாராவது நடிச்சு காட்ட முடியுமான்னு கேட்க, மதுமிதா செய்யுறேன்னு சொல்லி பண்ணினாங்க. அப்ப மோகன் வைத்யா மாதிரியே அவங்க நடிக்க, அதை ரசிக்காத மோகன் வைத்யா, ஒவ்வொருத்தர்கிட்டயா போய் என்ன வெச்சு செஞ்சுட்டா, பார்த்தீங்களா ? அப்டின்னு சொல்லி பேசினது, மோகன் வைத்யாவுக்கு, மதுமிதாவை ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல அப்டிங்குறதை வெட்டவெளிச்சமாக்குதுன்னு தான் சொல்லனும். மதுமிதா ரோல் எடுக்குறேன்னு சொல்லி, மதுமிதாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ரோல்ல மோகன் வைத்யா வந்ததும் அதை உறுதி படுத்தும் விதமாவே இருந்துச்சுன்னு தான் சொல்லனும்.

11வது நாளை இவ்வளவு சுவாரஸ்யமா முடிச்சாங்கன்னு நாம நினைச்சாலும், அடுத்தடுத்து பிரச்சனைகளை பிக்பாஸ் வீட்ல நாம பார்க்கப்போறது மட்டும் உறுதியாகிடுச்சுன்னு சொல்லலாம்.

வீடியோ:

கார்ட்டூன் கேலரி