பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்…..!

 

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில் இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்குகிறது.

முதல் போட்டியாளர் பாத்திமாபா ; செய்தி வாசிப்பாளர் கமல்ஹாஸனுடன் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடன இயக்குநராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய சாண்டி. தற்போது திரைப்படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா.

பாடகரும், நடிகருமான மோகன் வைத்யா

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின்.

பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன்.

லாஸ்லியா ; இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து உள்ளார்.

கவின் ; சின்னத்திரை நடிகராக பிரபலமானவர். கனா கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

அபிராமி ; பிரபல மாடலான இவர் பல விளம்பரங்களில் நடித்து உள்ளார். அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

.

பருத்தி வீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சித்தப்பூ  சரவணன்

வனிதா ; நடிகர் விஜயகுமாரின் மகள் இவர். தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தர்ஷன் – மாடல்

மாலேசியாவைச் சேர்ந்த பாடகர் முகென் ராவ்.

வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: abhirami, Bigboss, Cheran, fathima babu, Kamal, kavin, losliya, madhumitha, Mohan Vaithya, Mugen Roa, Reshma, sakshi agarwal, sandy, Saravanan, sherin, tharshan, vanitha, vijay tv
-=-