ஜூன் 23 முதல் ‘பிக் பாஸ் 3’ ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு…!

கடந்த 2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’.100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். 2018 ஆம் ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், ‘பிக் பாஸ் 3’ இந்த ஆண்டு ஒளிபரப்பாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 23-ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது . ‘இது வெறும் ஷோ அல்ல… நம்ம லைஃப்’ என்ற வாசகத்துடன் இம்முறை ஒளிபரப்பாகிறது ‘பிக் பாஸ் 3’.

‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என சாந்தினி தமிழரசன், ரமேஷ் திலக், டி.ராஜேந்தர், ராதாரவி, கஸ்தூரி உள்ளிட்ட பலரின் பெயர்களும் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அனைவருமே இதை மறுத்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி