ஓவியாவை அடிக்கப் பாய்ந்த சக்தி! :  பிக்பாஸ் அதகளம்

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூக வலைதளங்களில் மீம்ஸ், கலாய்ப்புகள்,  விமர்சனங்கள்  என்று  தூள் பறந்துகொண்டிக்கிறது. இந்த நிலையில் போட்டியாளர்களில் ஓவியா மீது மற்ற அனைவரும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

“ஓவியா யாரையும் மதிப்பதில்லை.. எந்த வேலையும் செய்வதில்லை” என்று மற்றவர்கள் குறை சொல்கிறார்கள்.

இந்நிலையில்  பிக்பாஸ் குடும்பத்தினர் ஒரு நாடகம் நடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் உத்தரவிட்டார். அதன்படி ஆளுக்கொரு வேடம் போட்டனர். சிநேகனுக்கு வேலைக்காரன் வேடம்.

அன்று அவரவர்கள் சாப்பிட்ட தட்டை அவரவர்கள் தான் கழுவி வைக்க வேண்டும் என வையாபுரி  கூறினார்.  ஆனால் ஓவியாயோ, “வேலைக்காரன் தான் தட்டு கழுவுவான்” என்று  திமிராகக் கூறினார். இதனால் சிநேகன் ஆத்திரப்பட்டார்.

ஓவியா – சக்தி மற்றும் இதரர்

இதைப் பார்த்து வந்த சக்தி, ஓவியாவிடம், “இப்படி இருக்காதீர்கள். எல்லோருடனும் ஒத்துபோக வேண்டும்” என்று அறிவுரை கூறினார்.

ஓவியாவோ, “ என்னால் முடியாது, நீ எது வேண்டுமானாலும் பண்ணிக்கோ” என்று மீண்டும் அலட்சியமாக சொல்லிவிட்டுச் சென்றார். இதனால் சக்தி உள்ளிட்டோர் ஓவியா பற்றி தங்களுக்குள் குமுறலுடன் பேசினர்.

இது முடந்து நேற்று பிக்பாஸ் குடும்பத்தினர் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தனர்.

இன்று மீண்டும் பிரச்சினை வெடித்தது.

ஓவியாவை காயத்ரி ஜாடைமாடையாக வசைபாடிக்கொண்டே இருந்தார்.  ஒரு கட்டத்தில் ஓவியா, “ என்னைப் பத்தி தப்பா பேசுனா உங்களுக்குத்தான் மக்கள்ட்ட கெட்ட பெயர்” என்றார். பதிலுக்கு காயத்ரி பேச.. வா, போ என்று வார்த்தை தடித்தது.

இடையில் புகுந்த சக்தி, “நீ தப்பு செய்துவிட்டு எதிர்த்து பேசுறே” என்று ஓவியாவிடம் ஆத்திரத்துடன் கூறினார்.

அதற்கு ஓவியா, “இது எனக்கும் காயத்திரிக்குமான பிரச்சினை நீங்கள் வரக்கூடாது. யு ஷெட் அப்” என்றார் எரிச்சலுடன்.

இதனால்  கடும்  ஆத்திரமான சக்தி, “அப்படியே அறைஞ்சுடுவேன்” என்று ஓவியாவை அடிக்கப் பாய்ந்தார்.

“எங்கே.. அடி பார்ப்போம்” என்று ஓவியாவும் வந்தார்.

அப்போது சக்தியின் கைகளை ஆரவ் பிடித்துக்கொண்டார். ஆனால் ஓவியாவை அடிக்க சக்தி திமிறினார்.

பிறகு அவரை மற்றவர்களும் சமாதானம் செய்தனர்.

ஓவியாவை சக்தி அடிக்கப் பாய்ந்ததால், நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டும் எகிறியிருக்கிறது.