30ரூபாய்க்கு விற்பனையாகும் ‘பிக்பாஸ்’ சிடி

சென்னை,

னியார் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ்  நிகழ்ச்சியின் தொகுப்பாக சிடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்டனர். 100 நாட்களுக்குப் பிறகு இதில் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்காக தயார் செய்யப்பட்ட வீட்டில்  பிரமாண்டமான நீச்சல்குளம், பெட்ரூம், கிச்சன், பாத்ரூம் ஆகியவை நவீனமயமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

தினசரி ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. வாராவாரம் நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சி குறித்தும், அதில் கலந்துகொண்டவர்கள் பற்றியும் கருத்து தெரிவித்து நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினார்.

100 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றிபெற்றார். அவருக்கு 50லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது. இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்ட சினேகனுக்கு எந்தவித பரிசும் வழங்கப்படவில்லை.

நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் கடந்தும் மக்களிடையே பிக்பாஸ் ஜூரம் ஓயவில்லை. அதன் காரணமாக சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிடிகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

ஐந்தைந்து பகுதிகளாக விற்பனை செய்யப்படும் இந்த பிக்பாஸ் சிடி ஒன்று ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கார்ட்டூன் கேலரி