அம்பலமாகும் “பிக்பாஸ்” செட் அப்கள்!

--
கமல்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சிக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சமுதாயத்தை சீரழிக்கிறது, பிளவு ஏற்படுத்துகிறது, ஆபாசமாக இருக்கிறது என்று ஏகப்பட்ட விமர்சனங்கள்.

சேரி பிஹேவியர்” காய்த்ரி

இந்த நிலையில், “ரியாலிடிட்டி ஷோ என்று சொல்லப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி முழதும் திட்டமிட்ட நாடகமே” என்றும் ஆதாரத்தோடு சமூகவலைதளங்களில் பலரும் பதிந்தி வருகிறார்கள்.

அதாவது, ஏற்கெனவே ஆங்கிலம் இந்தி  ஆகிய மொழிகளில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வரும் “சம்பவங்களை”ப் போலவே தமிழிலும் திட்டமிட்டு ஸ்கிரிப்ட் தயார் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவரான காயத்ரி ரகுமாம், சக போட்டியாளரான ஓவியாவை “சேரி பிஹேவியர்” என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏறிக்குதிக்கும் தமிழ் பரணி, ஹிந்தி குஷால்

இதே போல ஆங்கில பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஒருவரை நிற வெறியுடன் வேறு இருவர் கூறுவது போல வந்தது.

அதே  தமிழ்  நிகழ்ச்சியில், போட்டியாளர் பரணி, சுவர் ஏறிக்கு தித்தி பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பிக்க முயற்சிப்பார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல ஹிந்தியில் வெளிவந்த பிக்பாஸில் குஷால் என்பவர் தப்பி செய்ய முயற்சிப்பார். இரு புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி, “இந்தி, ஆங்கில பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் அப்பட்டமான காப்பிதான் தமிழ் பிக்பாஸ். ரசிகர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்” என்ற விமர்சனம் எழுந்தது.

வயிற்று வலியும் அதே ஸ்கிரிப்ட்

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், “வயிற்று வலி” என்று ஜூலி கதறித்துடிக்க.. அவரை சிநேகன் தூக்கி படுக்கையில் படுக்கவைப்பது போன்ற காட்சி ஒளிபரப்பானது.

இதுவும் இந்தி பிக்பாஸ் ஸ்கிரிப்டில் உள்ளது தான் என்று படங்களுடன் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ரியாலிட்டி ஷா என்று மக்களை ஏமாற்ற வேண்டுமா?

ஹூம்.. இந்த பிழைப்புக்கு..