Random image

“பிக்பாஸ்” காயத்ரி:  மண முறிவு – தேர்தல் – சர்ச்சை

“பிக்பாஸ்” காயத்ரி ஃபுல் ஸ்டோரி: 2 : 

“தமிழத் திரையுலகின் தந்தை” என்று போற்றப்படும் கே.சுப்பிரமணியன் பரம்பரையில் வந்தவர் ரகுராம். பிரபல நாட்டிய தாரகை பத்மாசுப்ரமணியம் இவருக்கு சித்தி முறை.  அவருடன் இணைந்து சிறு வயதில் நடனம் பயின்றார்.

பிறகு பத்மா சுப்பிரமணியத்தின் நடனக் குழு, நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின் நடனக் குழு, வைஜெயந்திமாலாவின் நடனக்குழு ஆகியவற்றில் ரகுராம் நடனமாடி வந்தார்.

பிறகு திரைத்துறைக்கு வந்தார். நடன இயக்குநர் தங்கப்பனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அப்போது, அங்கு மற்றொரு உதவியாளராக இருந்த கிரிஜா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இது கலப்புத்திருமணமமும்கூட.

காயத்ரி ரகுராம்

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆக வந்து ரகளை பண்ணுகிறாரே.. கலா… அவரது சகோதரிதான் கிரிஜா.

கமல், ரஜினி உட்பட பெரும் நட்சத்திரங்கள் பலரையம் ஆட்டுவித்திருக்கிறார் நடன இயக்குநரான ரகுராம்.

இவருக்கு  காயத்ரி ரகுராம் என்று இரு மகள்கள்.  இவர்களில் காயத்ரி ரகுராம்தான் “சேரி பிஹேவியர்” என்று பேசி சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார்.

இவர்,  தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘சார்லி சாப்ளின்’ படத்தின்  மூலம் நடிகையாக அறிமுகமானார்.  தொடர்ந்து ‘விசில்’, ‘பரசுராம்’, ‘ஸ்டைல்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பெரிய அளவில் சோபிக்க முடிவில்லை.

தங்கை சுஜா – தந்தை ரகுராம் ஆகியோருடன் காயத்ரி

பிறகு தீபக் சந்திரசேகர் என்ற பொறியியலாளரை  திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றார்.  திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட  கணவரை பிரிந்து சென்னை வந்தார்.

கணவர் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்தியதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர்களோ, காயத்ரிதான் தங்களை மோசமாக பேசினார் என்று தெரிவித்தார்கள்.

இறுதியில் காயத்ரியிடமிருந்து விவாகரத்து பெற்று சென்றார் கணவர். இதற்காக அவர், காயத்ரிககு பெரும் பணம் கொடுத்ததாக செய்திகள் கசிந்தன.

மனமுறிவுக்குப் பிறகு ‘கந்தசாமி’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார் காயத்ரி ரகுராம். மேலும்  தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும்  இருந்தார்.

கலா – கிரிஜா

இந்நிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு பொறுப்பும் அளிக்கப்பட்டது. கடந்த  சட்டமன்ற தேர்தல் நேரத்தில்  சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர், “இந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்” என்று முழங்கினார்.

அந்தத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இடையில் தாரைத்தப்பட்டை படத்துக்கும் நடன இயக்குநராக இருந்தார்.

அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை. ஆகவே, “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிறகுதான் தற்போதைய சர்ச்சை.

இதுதான் காயத்ரி ரகுமானின் ஸ்டோரி.. ஓ.கே.வா?

 

முதல் அத்தியாயம்