“பிக்பாஸ்” காயத்ரி ஃபுல் ஸ்டோரி: 1: தமிழ்த் திரையுலகின் பேத்தி!

ப்போது எங்கெங்கிலும் “காயத்ரி ரகுராம்” பற்றித்தான் பேச்சு. “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று இவர் நடிகை ஓவியாவை ஆத்திரத்துடன் விமர்சிக்க…  “சேரி மக்களை காயத்ரி இழிவு படுத்துகிறார்” என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. காவல்துறைியலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மிகப்பெரிய இயக்குநராக விளங்கிய காயத்ரி ரகுராமின் தாத்தா, கே.சுப்பிரமணியம், சாதி வேறுபாடுகளை எதிர்த்து அந்தக்காலத்திலேயே புரட்சிகரமாக திரைப்படங்கள் எடுத்தவர். சாதி மறுப்பு திருமணமும் செய்துகொண்டவர்.

அவர் பெயர் கே. சுப்பிரமணியம்.  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கே. சுப்பிரமணியம் அக்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக பெயர் பெற்றவர். ஆனால் திரைத்துறை மீதான ஆர்வத்தால் அத்தொழிலை விட்டுவிட்டு சென்னை வந்தார்.

இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் சாதி, மத மறுப்பும் தேசபக்தியும் மிளிரும்.  மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார்.

இத்திரைப்படத்தில்தான் தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். தியாகராஜ பாகவதர், பின்னாட்களில் தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கினார்.

கே.சுப்பரமணியம்

அப்படத்தில் நடித்த சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் மணந்து கொண்டார். சுப்பிரமணியத்தின் அடுத்தபடமான  பாலயோகினி (1937) படமும் சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட படம்தான்.

கே. சுப்ரமணியத்தின் தீவிர  முயற்சியால்தான் 1939 ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தோன்றியது. அதன் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி இருந்தார்.

பாலயோகினி (1937) சேவாசதனம் (1938) தியாகபூமி (1939) இன்பசாகரன் (1939) பக்த சேதா (1940) உட்பட பல படங்களை எடுத்தார்.

இவர், “தமிழத்திரையுலகி்ன் தந்தை” என்று புகழப்படுகிறார்.

அப்படியானால் இவரது பேத்தியான காயத்ரி, தமிழ்த்திரையுலகின் பேத்திதானே!

(தொடரும்)

 

இரண்டாம் அத்தியாயம்