பிக்பாஸ்: பா.ஜ.க. காயத்ரி ரகுராமுக்கு இந்துமக்கள் கட்சி எதிர்ப்பு!

சென்னை,

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த காயத்திரி ரகுராம், மற்றும் நடிகைகள்,  பாடலாசிரியர் சிநேகன், நடிகர்கள் கஞ்சா கருப்பு, வையாபுரி உள்பட 15 பேர் பங்குபெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள்  100 நாட்கள் வெளி உலகத்தை தவிர்த்து, ஒரே வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்து, அன்றாடக நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். இது அனைத்தும் காமிராவினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் கலந்துகொண்டதற்கு அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கலாரச்சார சிரழிவு நிகழ்ச்சியான பிக் பாஸிலிருந்து பாஜக கலைபிரிவு தலைவர்களில் காய்திரி ரகுராம் விலக வேண்டுமென இந்து மக்கள் வலியுறுத்தி உள்ளது.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டித்து விஜய் டிவிக்கு எதிராக இந்துமக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.