பிக் பாஸ் 4 வது சீசனுக்கான போட்டியாளர்கள் விவரம்….!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியானது ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிகளிலும் நடத்தப்படுகின்றது.இதன் தமிழ் பதிப்பானது ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.

தமிழில் இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்..

தமிழில் மூன்று சீசன்கள் வெளியாகியுள்ளது . முதல் சீசனில் ஆரவ் முதல் இடத்தினையும், சினேகன் இரண்டாவது இடத்தினையும் பெற்றனர். அடுத்து 2 வது சீசனில் ரித்விகா முதல் இடத்தினையும், ஐஸ்வர்யா தத்தா இரண்டாவது இடத்தினையும் பெற்றனர். 3 வது சீசனில் முகென் ராவ் முதல் இடத்தினையும், சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தினையும் பெற்றனர்.

தற்போது பிக் பாஸ் 4 வது சீசனுக்கான போட்டியாளர்கள் விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகர் ஈஸ்வர்ம, நடிகர் சாய் சக்தி, நடிகை ஜெயஸ்ரீ, நடிகர் விமல், ரியோ ராஜ், ராதா ரவி, விசித்ரா, தேவயாணி, தொகுப்பாளினி ரம்யா, ரட்சிதா, டிடி, சின்மயி, வர்ஷா பொல்லம்மா, ரம்யா பாண்டியன், வித்யுலேகா ராமன், சஞ்சனா சிங், நடிகர் ஸ்ரீமன் ஆகியோர் பெயர் வெளியாகியுள்ளது . இவை யாவும் ஆதாரப்பூர்வமானது அல்ல .