பிரம்மாண்டமாக துவங்கியது கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 ……!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தொடங்கியது.

இந்தாண்டு பிக் பாஸ் போட்டியாளர்களின் பட்டியல் இதோ:

* ரியோ – நடிகர்

* சனம் ஷெட்டி – நடிகை

* ரேகா – நடிகை

* பாலா (பாலாஜி முருகதாஸ் ) – பாடி பில்டர்

* அனிதா சம்பத் – நியூஸ் ரீடர்

* ஷிவானி – நடிகை

* ஜித்தன் ரமேஷ் – நடிகர்

* வேல்முருகன் – பாடகர்

* ஆரி – நடிகன்

* சோம் சேகர் – மாடல்

* கேப்ரில்லா – நடிகை

* அறந்தாங்கி நிஷா – நகைசுவை நடிகை

* ரம்யா பாண்டியன் – நடிகை

* சம்யுக்தா – மாடல்

* சுரேஷ் சக்ரவர்த்தி – நடிகர்

* ஆஜீத் – பாடகர்

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே கமல் பிக்பாஸ் வீட்டை சுற்றிக்காட்டுகிறார். முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த முறை வீடு சற்று மிக பெரிதாகவே இருக்கிறது. ஆனால் பெட் ரூமின் ஒரு பகுதியை பூட்டு போட்டு பூட்டி இருக்கிறார்கள்.

பெட்ரூம் மட்டுமின்றி பாத்ரூமில் கூட சங்கிலி போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள்.

சமையல் அறையில் ஸ்டவ்வில் நான்கு பர்னர்கள் இருந்தாலும் அதில் இரண்டு மட்டுமே எரியும்.

வீட்டில் இருக்கும் ஜெயிலுக்கு இந்த முறை கம்பிக்கு பதில் கண்ணாடி தான் வைத்து இருக்கிறார்கள்.

கொரோனா காரணமாக பிக் பாஸ் ஷோவில் கமல் பேசும்போது ஆடியன்ஸ் இல்லை .வீடியோ காலில் இணைக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே விஜய் மியூசிக் என்ற புது சேனலை அறிமுகப்படுத்துகிறார் கமல். ரிமோட் அழுத்தி அந்த சேனலை துவங்கி வைப்பது மட்டும் இல்லாமல் ஒரு கோரிக்கையையும் அவர் விஜய் டிவிக்கு வைத்துள்ளார்.

ஒரு இசை ரசிகனாக எனது கோரிக்கை.. அன்பு கட்டளை என எடுத்துக் கொண்டாலும் சரி. சினிமா இசை என்பது ஆலமரம் அதன் அடியில் மற்ற சிறிய பயிர்கள் வளர்வது கடினம். அதனால் அதற்கு தனி களம் வேண்டும் என நான் நினைக்கிறேன். 25 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இதற்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என கமல் கூறியுள்ளார்.