‘பிக்பாஸ்-2’ டேனியல் காதலியுடன் திடீர் பதிவு திருமணம்

சென்னை:

னியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில், சமீபத்தில் வெளியேறிய டேனியல், தனது காதலியுடன் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். இது சினிமா உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து  70 நாட்களாக பங்கேற்ற நிலையில்,  ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் கடந்த வாரம்  எவிக்‌ஷன் மூலம் வெளியேறினார்.  இந்த நிலையில்,  தனது காதலியான டெனிஷாவை அவசரமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த  இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை  மமதி, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், நித்யா, மஹத், டேனியல் உள்பட  பலர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். புதிதாக விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளார் .தற்போது  7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் டேனியல் தனது காதலியான டெனிஷாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் டேனியல் பதிவிட்டுள்ளார். அதில்,  “என் மனைவியான திருமதி டெனிஷா டேனியல் என எல்லோருடனும் என் அழகான குட்டுவை அறிமுகப்படுத்த நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு சிறிய முறையில் பதிவு திருமணம் நடைபெற்றது. சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக இப்போது வரை நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இந்த அழகான தருணத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கணவனும் மனைவியுமாக எங்கள் அழகான பயணத்தை தொடங்குகையில் உங்கள் நலன்களையும் ஆசீர்வாதங்களையும் தேடுகிறோம்’ என்று பதிவிட்டு உள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி