நீதி தேவதை சுசித்ராவை விமர்சித்த கமல்….!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வராம் கோர்ட் டாஸ்க்கில் சுசித்ரா வீட்டில் உள்ள போட்டியாளர்களின் பிரச்சனைகளை பேசி தீர்த்தார் . அந்த விவகாரம் குறித்து இன்றைய ப்ரோமோவில் பேசியுள்ள கமல் சுசித்ராவின் நீதிகளை அலசி ஆராய்கிறார்.

அத்துடன் ரியோ அறிவுத்தலின் பேரில் நிஷா இயங்குகிறார் என சுசித்ரா சொன்னதை நினைவு கூர்ந்த கமல் அதை சுசித்ராவிடமே கேட்க அவர் அப்படியே அந்தர் பல்டி அடித்து அதற்கு காரணம் கமல் தான் என கூறிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் மிக அருமையாக விளையாடிக்கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் இறுதிவரை நீடிப்பார் என்று நினைத்த நிலையில் மிகக்குறுகிய காலத்திலேயே பிக்பாஸ் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது உண்மையில் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது.