பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
இந்நிலையில் சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.
நடிகை ரம்யா பாண்டியன், நிகழ்ச்சி தொகுப்பாளினி ஷிவாங்கி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை, நடிகைகள் சுனைனா, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.