Random image

ராஜபீமா படத்தில் கதாநாயகனாகும் ஆரவ்

சென்னை

ராஜபீமா என்னும் படத்தில் கதாநாயகனாக பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கிறார்.

ஆரவ் சிறு சிறு வேடங்களில் மட்டுமே தலை காட்டி வந்தார்.   துல்கர் சல்மான் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்னும் படத்தில் ஆரவ் அவர் நண்பனாக நடித்தார்.   வேறு எந்த படத்திலும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் கிடைக்கவில்லை.

விஜய் டிவி ஒளிபரப்பிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆரவ்  நுழைந்தார்.

 

அந்த நிகழ்வில் ஓவியாவுடன் அவருக்கு உண்டான காதல் ரசிகர்களிடையே பிரபலமாகி இன்றும் பேசப்படுகிறது.    அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி வாகை சூடியதும்  அனைவரும் அவர் ஒரு பிரபல கதாநாயகனாக வருவார் என எதிர்பார்த்தனர்.    அந்த எதிர்பார்ப்பு பொய்யானது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தற்போது ராஜபீமா என்னும் படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த படத்தின் இயக்குனர் நரேஷ் சம்பத்.   சைமன் கே கிங் இசையமைக்கும் இப்படத்துக்கு சதீஷ்குமார் ஒளிப்பதிவாளராக உள்ளார்.   இந்த படத்தில் யானையுடன் ஆரவ் நிற்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது

You may have missed