சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று 3வது நாளாக செவிலியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு தரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து சென்றுவிட்ட நிலையில், மற்றொரு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு திமுகவை சேர்ந்த கனிமொழி எம்.பி. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள செவிலியர்களை சந்திக்க, ஜல்லிக்கட்டு மற்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக நாடு முழுவதும் பிரபலமடைந்த ஜூலி சந்தித்து ஆதரவு தெரிவிக்க சென்றார்.

ஆனால், அவரை உள்ளே விட போலீசார் மறுத்துவிட்டனர். ஆனால், அவர் போலீசாரிடம் தானும் செவிலியர்தான் என்று வாக்குவாதம் செய்தார். ஆனால், அவரை டிஎம்எஸ் வளாகத்துக்குள் செல்ல போலீசார் மறுத்துவிட்டனர்.

இதன் காரணமாக சிறிது நேரம் டிஎம்எஸ் வாசலில் செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிவிட்டு திரும்பினார்.

பிக்பாஸ் ஜூலி நர்சிங் படிக்கவில்லை என்றும், பிளஸ் டூ முடித்தவுடன் தனியார் மருத்துவமனை யில் நர்ஸ் (போல்) வேலைக்கு சேர்ந்து பயிற்சி பெற்றவர் என்று ஏற்கனவே தகவல்கள் வெளி யானது குறிப்பிடத்தக்கது.