திருச்சி:

சீட்டு நிறுவனம் நடத்தி, முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ‘பிக்பாஸ்’ கவின் தாயார் உள்பட அவரது உறவினர்களுக்கு திருச்சி நீதிமன்றம்  7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறி உள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில், தன்னுடன் ஒரே வீட்டில் குடியிருந்து வரும்,  பல பெண்களிடம் காதல் வயப்பட்டும்,  ஜொள்ளுவிட்டுக்கொண்டும் அலையும் கவின் குறித்து அனைவரும் அறிந்திருப்போம்.

ஆனால் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருச்சி கே.கே.நகரில் வசித்து வரும் கவின் குடும்பத்தினர், அங்கு சீட்டு நிறுவனம் நடத்தி மக்களின் பணத்தை ஸ்வாகா செய்துள்ளனர். கவினின் தாய்  ராஜலட்சுமியும்,  தந்தை அருணகிரி, அவரது தாய் தமயந்தி, சகோதரர் சொர்ணராஜன், சகோதரர் மனைவி ராணி ஆகியோரும் சேர்ந்து கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை சீட்டு நிறுவனம்  நடத்தி வந்துள்ளனர்.

இவர்களது சீட்டு நிறுவனத்தில் ஏராளமானோர் தங்களது சேமிப்பை செலுத்தியிருந்த நிலையில், பலருக்கு பணம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 34 பேர் அவர்கள் மீது புகார் கொடுதுள்ளனர். புகாரில், தங்களது பணம்  32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும், சீட்டு முடிந்தும்  தங்கள் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறி இருந்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை  திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில், சொர்ணராஜன், அருணகிரி ஆகியோர் உயிரிழந்தனர். தற்போது வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி உள்ளது.

தீர்ப்பில், சீட்டு நிறுவன முறைகேட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், சீட்டு நிறுவனம் நடத்திய கவினின்  தாய் தமயந்தி, ராஜலட்சுமி மற்றும் ராணி ஆகிய இருவக்கு  மோசடி வழக்கில் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின் படி தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதன் காரணமாக அவர்களது தண்டனை 7 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

மேலும் புகார் அளித்தவர்களில் பணம் செலுத்தியதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த 29 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பிக்பாஸ் கவினைப் போலவே அவரது குடும்பத்தினரும் தில்லாலங்கடிகளாக இருப்பார்கள் போலும்…