பிக்பாஸ் சீசன் 2: இதிலும் கமல்?

இந்தி உட்பட பல மொழி சேனல்களில்   பிரபலமாக பிரபலமாக விளங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை, தமிழுக்கு அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. வெளித்தொடர்பே இன்றி ஒரு வீட்டுக்குள் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்வார்கள்.

தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் தமிழகம் முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஓவியாவின் குறும்புத்தனம், ஆரவ் உடன் காதல், காயத்திரி ரகுராம் கெட்டவார்த்தை பேசியது, ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியின் கபட நாடகம், பாடலாசிரியர் சினேகனின் கட்டிப்பிடி என பல்வேறு சுவாரஸ்யங்கள் இருந்தன.

போட்டியின் இறுதியில் ஆரவ் வெற்றி பெற்றார்.

தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசன் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. விரைவில் இதில் கலந்துகொள்ளப்போகிறவர்கள் முடிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

கமல், அரசியலில் ஈடுபட்டுள்ளதால், இரண்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்றாற்போல, இரண்டாவது சீசனை அரவிந்த்சுவாமி தொகுக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இதையும் கமலே தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி மூலம், சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினால் தனது அரசியலுக்கும் உதவும் என்று கமல் நினைப்பதாக கூறப்படுகிறது.