ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன், ஜூலையில் ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது.

வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்க விஜய் டிவி நிர்வாகம் தயாராகி வருகிறது.

செப்டம்பர் ,அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களும் இதற்கான முழு வேலைகளையும் முடித்து ஒளிபரப்பையும் நிகழ்த்தி விட வேண்டும் என சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளது.

கமல் தரப்பிலும் பச்சைக் கொடி காட்ட அவரை வைத்து விரைவில் ப்ரொமோ ஷூட் ஒன்றை நடத்தவும் தயாராகியுள்ளது.