சொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…!

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் 17-வது நபராக விஜே அர்ச்சனா இணைந்திருக்கிறார்.

கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் குறைந்த வாக்குகளைப் பெற்று நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 5 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.

இதனிடையே அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரமோவில், ஒரு சுவாரஸ்யமான டாஸ்க் வழங்கப்படுகிறது. அதாவது அரக்கர்களும், அரக்கிகளும் என்ன தொல்லை கொடுத்தாலும் அதற்கு மற்றவர்கள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். அதில் போட்டியாளர்களை இரண்டாக பிரித்து பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளும் போலவும் மீதி பேர் ராஜ குடும்பத்தை போலவும் உடை அணிந்து இருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சொர்க்கபுரி ராஜ குடும்பத்திற்கும், மாயபுரி அரக்க குடும்பத்திற்கும் இடையே நடக்கும் கடும் போட்டி என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

மூன்றாவது ப்ரோமோவில் சுரேஷ் ரியோவை கோபமூட்டி பார்க்கிறார்.