பிக்பாஸ் போட்டியில் கடுமையாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்….!

பிக் பாஸ் பாஸ் நான்காவது சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது.அதனால் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது பற்றி பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

இந்நிலையில் இந்த வார நாமினேஷன் இன்று பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே ஓபன் நாமினேஷன் தான் நடைபெற்றது. முதல் ஆளாக ரியோவை நாமினேட் செய்தார் ஆரி.

ஆரியின் மகள் வந்தபோது அவர் ரூல்ஸை பின்பற்றி இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் பார்க்காமல் வேறு எதையோ சொல்கிறார் என என்னை பற்றி தவறாக நினைப்பார்கள். நான் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை என ரியோ தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரி பயமுறுத்துறாரு….அவர் மேல எக்ஸ்ட்ரா கோவம் வருது என கேபியிடம் புலம்புகிறார் ரியோ. ரியோ சொல்வதை கேட்டுக்கொண்டே உணவு எடுத்துக்கொண்டார் கேபி.

மேலும் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் இன்று முதல் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.