2ஜியை விட பெரிய ஊழல்: நடிகர் மிதுன் சொல்லும் அதிரடி தகவல்

ளத்தூர் கிராமம் படத்தில் வில்லனாக நடித்து பலரது பாராட்டுக்களைப் பெற்றவர் மிதுன்குமார். பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவர் தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பைத்தாண்டியும் பல விசயங்களைத் தெரிந்துவைத்திருக்கிறார் மிதுன். அதில் நாம் மிக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல்…

“நாம் ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறோம் அல்லவா…? கார்டு வைத்திருக்கும் அதாவது பேங்கில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் பயன்படுத்தும் கார்டை பொறுத்து  15 முதல் 25 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு இலவசம். ஆனால் இது  பலருக்கும் தெரியாது.

சம்பந்தப்பட்ட வங்கிகளில் கேட்டால் கூட இல்லை என்பார்கள்.   ஆனால் இதனை குறிவைத்து சில மருத்துவமனைகள் வங்கியுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கின்றன. சொல்லப்போனால் 2ஜி ஊழலை விட இதுதான் மிகப்பெரிய ஊழல்” என்று சொல்லி முடித்தார் மிதுன்.