‘தளபதி 63’ படப்பிடிப்புக்காக தயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம்…!

--

கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ உருவாகி வருகிறது.விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் . இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னதாகவே வாங்கிவிட்டது.

இதுவரை சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தின் சில முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள கதை என்பதால், சென்னைக்கு அருகில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் அமைத்து வருகிறது படக்குழு.

கால்பந்தாட்டம் ஆட வேண்டும் என்பதால் இந்த அரங்கில் தான் அடுத்த 50 நாட்களுக்கான படப்பிடிப்பு நடத்தவுள்ளது படக்குழு.