‘பிகில்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவித்தார் அர்ச்சனா கல்பாத்தி….!

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் எனத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது .

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் ‘ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அப்டேட்டுக்காக காத்திருப்பேன். இசை வெளியீட்டு விழாவான அந்நாளில் தளபதியின் பேச்சை கேட்பதற்காக ஆவலாக இருப்பேன். இந்த முறை அந்த அறிவிப்பை நானே வெளியிடுவேன் என்னால் நம்ப முடியவில்லை. கனவு மெய்ப்பட்டது. பிகில் இசை வெளியீடு 19/9/19 அன்று வெளியாகவிருக்கிறது’ என அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி