2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் தளம்.

அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி ‘விஸ்வாசம்’முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது ட்விட்டர் தளம் #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் 2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இதில் ‘பிகில்’ திரைப்படத்தின் போஸ்டர் தொடங்கி படக்குழு சம்பந்தப்பட்ட பலரது ட்விட்டர் பக்கங்களும் சாதனை புரிந்திருக்கிறது. இதனை ட்விட்டர் தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

@actorvijay வெளியிடப்பட்ட ‘பிகில்’ போஸ்டர் தான், பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகமான ரீ-ட்வீட்களும், கருத்துகளும் பெற்ற ட்வீட்டாக ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியளவில் அதிக முறை உபயோகப்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் படம் ‘பிகில்’ மட்டுமே.

 

பெண்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் ‘பிகில்’ படம் பத்தி பதிவிட்ட அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டர் பக்கம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆண்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் விஜய் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கம் 5-வது இடத்திலும், இயக்குநர் அட்லியின் ட்விட்டர் பக்கம் 10-வது இடத்திலும் உள்ளது. இருவருமே ‘பிகில்’ படம் தொடர்பாக ட்வீட்களை வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..