அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் 178 நிமிடங்கள் 59 விநாடிகள் நேரம் கொண்டது என தணிக்கை சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது . அதன்படி அக்டோபர் 25-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.